அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ - ஜியோவின் 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' இன்று சென்னையில் நடக்க உள்ளது... இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.. ஆனால் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றபோது இருந்த கடுமையான கொரோனா தொற்றுச் சூழலாலும், அரசுக்கு கடுமையான நிதி பற்றாக்குறை இருந்ததாலும் அந்த கோரிக்கைகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டன...!
ஜாக்டோ ஜியோ
இதனிடையே, நிதி நிலைமை சரியானதும் அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவதாக முதல்வர் ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தார். எனினும் அக விலைப்படியைத் தவிர வேறு எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாத நிலையில், இன்றைய தினம் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டினை ஜாக்டோ ஜியோ நடத்துகிறது.. முன்னதாக, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை செயலகத்தில், முதல்வரை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினர்...
மாநாடு
பின்னர், செய்தியாளர்களிடம் இவர்கள் பேசியபோது, "ஜாக்டோ - ஜியோ சார்பில், 10ம் தேதி சென்னை தீவுத்திடலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடத்தும், 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' நடக்க உள்ளது. மாநிலம் முழுதும் இருந்து, 4 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளார்...
அரசாணைகள்
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக, எங்களின் வாழ்வாதாரத்துக்காக போராடினோம்... பள்ளிக் கல்வித் துறையில், 108, 109 அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். கமிஷனர் பணியிடத்தை ரத்து செய்து, இயக்குனர் பணியிடத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச கோரிக்கைகளை முதல்வரிடம் அளித்துள்ளோம்...
சர்ப்ரைஸ்
மாநாட்டில், எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அறிவிப்புகளை, முதல்வர் வெளியிடுவார் என்று நம்புகிறோம். இந்த மாநாடு வெற்றி மாநாடாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை தீவுத்திடலில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.. முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.. ஏற்கனவே பலமுறை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகாலமாக காத்துக்கிடக்கும் நிலையில், கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறுமா? முதல்வர் நல்ல செய்தி இன்று சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் ஜாக்டோ - ஜியோ மாநாடு, இன்று சென்னையில் நடக்க உள்ளது: ,
கண்ண்ண்டிப்பாக
ReplyDeleteஎதுவ்வ்வுமே நடக்காது. இவர்களுக்கு வாக்களித்தது 100% தவறாகப் போய்விட்டது. அதுவும் தியாகராசன் நிதி அமைச்சராக இருக்கும் வரை 1% கூட எதற்குமே வாய்ப்பில்லை.