அமெரிக்காவில் வேளாண்மைத்துறை மூலம் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.இதன் மூலம் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது தொடர்பாக பல மாதங்களுக்கு முன்பே அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் அந்த திட்டத்தை முதல்வர் கூர்ந்து கவனித்து அலசி ஆராய்ந்திருப்பது தெரிய வருகிறது.தனது கனவுத் திட்டங்களில் ஒன்றான காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு முதல்வர் பேசியாவது;
அமெரிக்க பள்ளிகள்'
'பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என்பது அமெரிக்காவில்மூலம் பல மாநிலங்களில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, ஐரோப்பா நாடுகளிலும், குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஃபிரான்ஸ் நாட்டிலும், காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.''ஆராய்ச்சி முடிவுகள்''பள்ளிகளில் காலை உணவு வழங்குவதால் அந்த நாட்டு மாணவர்கள் கற்றல் திறன் மேம்படுவதாகவும், மாணவர் வருகை அதிகரிப்பதாகவும், பல ஆய்வு முடிவுகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. மேலும், கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு காலை உணவுத் திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
''பண்டித அயோத்திதாசர்''
தமிழ்நாட்டுப் பிள்ளைகள் பசியால் வாடக் கூடாது என்று நினைக்கிறோம். அதனால்தான், இத்திட்டத்தை உடனடியாகத் தொடங்கி இருக்கிறோம். பள்ளிப் பிள்ளைகளுக்குக் கல்வியுடன் சேர்த்து உணவும் வழங்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தை முதலில் வெளிப்படுத்தினார் பண்டித அயோத்திதாசர் அவர்கள். அவரது பவுத்த சிந்தனையில் இது உதித்தது.
''முதல்வர் வேண்டுகோள்''
கலைஞர் மகனின் அரசு, கருணையின் வடிவான அரசாகச் செயல்படும் என உறுதி அளிக்கிறேன். அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், என்னுடைய அன்பான வேண்டுகோள் ஒன்றை நான் எடுத்து வைக்க விரும்புகிறேன். அரசானது தாயுள்ளத்தோடு இந்தத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. நீங்களும் தாயுள்ளத்தோடு இந்தத் திட்டத்தை பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எத்தகைய கவனத்தோடும், கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிடக் கூடுதல் கவனத்தோடும், கனிவோடும் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.''.,,
No comments:
Post a Comment