சென்னை: அடுத்த வருடம் முதல் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த திட்டத்திற்கு ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுமைப் பெண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
ராயபுரத்தில் தொடக்க விழா
இதன் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் கலந்து கொண்டார். இந்த உதவித் தொகையை பெற சுமார் 4 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
புதுமைப் பெண்
இந்த விழாவில் புதுமைப் பெண் என அச்சிடப்பட்ட டெபிட் அட்டைகளை முதல்வர் ஸ்டாலின், மாணவிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இந்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 1 லட்சம் மாணவிகளுக்கு முதற்கட்டமாக வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ரூ 1000 செலுத்தப்படும்.கல்வியின் துணைகல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல துடிக்கும் மாணவிகளுக்கு தந்தையின் பேரன்போடு என்றும் துணை நிற்பேன். மகள்களை படிக்க வைக்க காசு இல்லையே என பெற்றோர் கவலை கொள்ள கூடாது. சென்னை ராயபுரம் பாரதி கல்லூரியை 3 அடுக்கு கட்டடமாக கட்ட உத்தரவிட்டுள்ளேன்.
ஸ்மார்ட் கிளாஸ்
இந்த திட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணங்கள் குறைந்து மாணவிகள் உயர் கல்வி படிப்பது அதிகரிக்கும். தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ 150 கோடியில் ஒவ்வொரு பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்றார். இந்த ரூ. 1000 உதவித் தொகை மாதந்தோறும் 7-ஆம் தேதி மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும். தமிழ்நாடு, டெல்லி தவிர பிற பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள் சரியில்லை, வசூல்தான் நடக்கிறது என டெல்லி முதல்வர கெஜரிவால் குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment