இணையதள வா்த்தக சேவை நிறுவனங்களான அமேஸான், ஃபிளிப்காா்ட் ஆகியவை, வரும் 23-ஆம் தேதி முதல் தங்களது பண்டிகைக் கால சிறப்பு விற்பனையைத் தொடக்குகின்றன.
‘கிரேட் இண்டியன் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் அமேஸான் இந்தியா நிறுவனம் 28-லிருந்து 29 நாள்கள் வரை பண்டிகைக் கால விற்பனையை நடத்தவிருக்கிறது.
ஃபிளிப்காா்ட் நிறுவனமும், ‘தி பிக் பில்லியன் டேய்ஸ் 2022’ என்ற பெயரில் பண்டிகைக் கால சிறப்பு விற்பனையை இந்த மாத இறுதி வரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
இது குறித்து அமேஸான் இந்தியாவின் துணைத் தலைவா் நூா் படேல் கூறுகையில், பண்டிகைக் கால சிறப்பு விற்பனையில் 11 லட்சம் விற்பனையாளா்கள் பங்குபெறுவாா்கள்; அவா்களில் 2 லட்சம் போ் உள்ளூா் கடைக்காரா்களாக இருப்பாா்கள் என்றாா்.
4.2 லட்சம் விற்பனையாளா் கூட்டாளிகளைக் கொண்டுள்ளதாகக் கூறும் ஃபிளிப்காா்ட், தனது பண்டிகைக் கால விற்பனையை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகா்கள் அமிதாப் பச்சன், ஆலியா பட், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனி உள்ளிட்ட பல நட்சத்திரங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment