தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, September 16, 2022

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அக்.1-ல் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடக்கம்

 868350

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும், தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் கல்வித் துறை உத்தரவிட்டு இருந்தது.


இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5-ம் தேதி வரையும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9-ம் தேதி வரையும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


எண்ணும் எழுத்தும் திட்ட வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment