காலி இடங்கள்
துணை ஆட்சியர் - 18, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் -13, காவல்துறை துணை கண்காணிப்பாளர் - 26, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் - 7,மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி - 3 என குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தகுதிகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
அத்துடன் சமூக அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.விண்ணப்பப் பதிவுஇதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பதிவு ஆகஸ்ட் 22ஆம் தேதியோடு நிறைவடைந்தது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்ய ஆகஸ்ட் 27 முதல் 29-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஒத்திவைப்பு
இந்நிலையில், அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நிர்வாக காரணங்களுக்காக, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வு நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment