TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, August 22, 2022

TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?


tnpsc-exam-announced-1

TNPSC Group 4 VAO exam expected cut off and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம்.


தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.


இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.


இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.


தற்போது இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.


முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 161 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 155க்கு மேலும், BCM பிரிவினருக்கு 158க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 145 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 163 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 160 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 154க்கு மேலும், SCA பிரிவினருக்கு 147க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 154 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 152க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 150க்கு மேலும், SCA பிரிவினருக்கு 142க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.


சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 148 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 144 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 145க்கு மேலும், SC பிரிவினருக்கு 132க்கு மேலும், BCM பிரிவினருக்கு 142க்கு மேலும், SCA பிரிவினருக்கு 128க்கு மேலும், ST பிரிவினருக்கு 120 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.


ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.


இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

No comments:

Post a Comment