TNPSC GROUP-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, August 22, 2022

TNPSC GROUP-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..அக்டோபர் 30ல் முதல்நிலைத் தேர்வு

 டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இன்று டிஎன்பிஎஸ்சி இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு- (குரூப் 1) தேர்வு வரும் 30.10.2022 அன்று நடைபெற உள்ளது.துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 91 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். கடைசி நாளில் அதிக அளவிலான பட்டதாரிகள் விண்ணப்பிப்பார்கள் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது. அதன்படி இந்தாண்டு குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 21ம் தேதி வெளியிட்டது.

எத்தனை பதவிகள் காலி


துணை ஆட்சியர் பதவியில் காலியாக உள்ள 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 இடங்களில் என உள்ளிட்ட குரூப் 1 பதவியில் அடங்கிய 92 காலி பணியிடங்கள் அதில் அடங்கும். அறிவிப்பு வெளியானது.


முதல்நிலை தேர்வு


முதல் நிலை தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தலும் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்து வந்தனர். இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இதனால், குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று நள்ளிரவு 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


திருத்தம் செய்ய வாய்ப்பு


இன்றைய தினம் விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்றார் போல் நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. இந்த நிலையில் இணைய வழி விண்ணப்பங்களை வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை திருத்தம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அக்டோபர் 30ல் தேர்வுதொடர்ந்து குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தக்கட்டமாக முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர் முதன்மை தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment