டி.என்.பி.எஸ்.சி. குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குரூப்5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 5ஏ தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். புதிதாக பதிவு செய்வதற்கு ரூ.150 கட்டணமும், தேர்வு கட்டணம் ரூ.100-ம் செலுத்த வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. செப். 26 - 28ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம். டிசம்பர் 18ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC 5A Notification - Download here
No comments:
Post a Comment