பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, August 24, 2022

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை (School Innovation Project) செயல்படுத்த பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


IMG_20220824_142140

இந்த ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதற்காக " பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தினை " செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பள்ளி மாணவர்களின் புதிய தொழில் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிப்பது , தொழில் முனைவோர் கலாச்சாரத்தை வளர்ப்பது , தொழில் முனைதல் மற்றும் தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. மேலும் , இத்திட்டத்தினை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமான யுனிசெப் அறிவுச்சாரா நிறுவனம் மற்றும் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறது.

CoSE - School Innovation Project 2022-23.pdf - Download here

No comments:

Post a Comment