2015-ம் ஆண்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாகத் தற்போது வருமான வரி செலுத்துவோர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டாம் என நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட புதிய உத்தரவு அக்டோபர் 1, 2022 முதல் அமலுக்கு வரும். நிதி அமைச்சகம் நிதி அமைச்சகம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நிதி அமைச்சகம் வெளியிட்ட கெசட் அறிவிப்பின் படி, வருமான வரிச் சட்டத்தின்படி வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அக்டோபர் 1, 2022 முதல் அடல் பென்ஷன் யோஜனாவில் சேரத் தகுதி பெற மாட்டார்கள்.
புதிய விதியின்படி, அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு ஒருவர் இந்தத் திட்டத்தில் சேர்ந்திருந்தால், புதிய விதி அமலுக்கு வரும் தேதியில் அல்லது அதற்கு முன் வருமான வரி செலுத்துபவர் எனக் கண்டறியப்பட்டால்,
அவருடைய கணக்கு உடனடியாக மூடப்படும். அதுவரை டெபாசிட் செய்யப்பட்ட ஓய்வூதியத் தொகை திரும்ப அளிக்கப்படும்.
தற்போதைய அடல் பென்ஷன் யோஜனா விதிகளின்படி, 18-40 வயதுக்குட்பட்டவர்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் எந்தவொரு இந்திய குடிமகனும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், புதிய விதி அமலிலுக்கு வரும் பட்சத்தில் அக்டோபர் 1, 2022 முதல் வருமான வரி செலுத்துவோர் இந்தத் திட்டத்தில் பங்கேற்க முடியாது மற்றும் முதலீடு செய்ய முடியாது.
இதேவேளையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2019 இல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமும் உள்ளது. இரு திட்டத்திற்கு வருமான அளவு மட்டுமே முக்கியக் கட்டுப்பாடாக இருந்த நிலையில் தற்போது இது நீக்கப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment