மதுரை : அரசு ஆசிரியர், மாணவர் வருகையை செயலி வழி பதிவேற்றம் செய்வதில் ஆசிரியர்கள் திண்டாடினர்.
அரசு, உதவி பெறும் பள்ளிகளில் ‘எமிஸ்’ எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளத்தில் உள்ள செயலி மூலம் மட்டும் தான் ஆசிரியர், மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு வெளியானது. இதையடுத்து, பள்ளிகளில் காலை 9:00 – 10:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யும் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.
பல லட்சம் மாணவர்கள் வருகையை ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் பதிவேற்ற முயற்சித்ததால் பல இடங்களில் எமிஸ் தளத்தின் சர்வர் செயல் இழந்தது. செயலிக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.ஆசிரியர்கள் தங்கள் ‘லாக் இன்’ மூலம் வகுப்பு வாரியாக மாணவர் வருகையை பதிவு செய்த போதும், அதை தலைமையாசிரியர் லாக் இன் வழியாக அனுமதிக்க பல மணிநேரம் போராடினர்.
இதனால் மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுலவர் லாக் இன் பிரிவிலும் வருகை பதிவை அறிய தாமதம் ஆனது.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:பல நாட்களாக செயலி, பதிவேடு என இரண்டிலும் வருகைப்பதிவு செய்யப்படுகிறது.
ஆக.,1 முதல் ‘செயலியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’ என்ற கமிஷனரின் உத்தரவு எந்த மாவட்டத்திலும் முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. ஆசிரியர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Source : dinamalar
No comments:
Post a Comment