இன்ஜி., கவுன்சிலிங்கில் புது நடைமுறை அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, August 7, 2022

இன்ஜி., கவுன்சிலிங்கில் புது நடைமுறை அறிவிப்பு

 இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், ஏழு நாட்களுக்குள் கல்லுாரிகளில் சேர வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் சமீபத்தில் நடந்தது. இதில், 430 இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன் பங்கேற்று, வழிகாட்டு முறைகளை விவரித்தார். அப்போது, இந்த ஆண்டு அமலுக்கு வரும், புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டது.அதாவது, இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங்கில், ஒவ்வொரு சுற்றிலும் ஒதுக்கீடு பெறும் மாணவர்கள், தங்களுக்கான கல்லுாரிகளில் ஒரு வாரத்திற்குள் சென்று, அசல் சான்றிதழ்கள் வழங்கி, சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். 

அவர்கள் சேர்ந்த தகவலை, கல்லுாரிகளுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் டிஜிட்டல் தளத்தில், கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு தெரிவிக்காவிட்டால், அந்த இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக இருப்பதாக கருதி, அடுத்த சுற்றில் வேறு மாணவருக்கு ஒதுக்கப்படும். 

எனவே, மாணவர்களும், கல்லுாரி நிர்வாகத்தினரும், இதில் எந்த குளறுபடியுமின்றி செயல்பட வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment