தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கவுள்ளது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் அக்டோபர் 21ஆம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது. கலந்தாய்வில் நமக்கு பிடித்த படிப்புகளை எப்படித் தேர்வு செய்வது என்று பார்க்கலாம்.அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு கடந்த 16ஆம் தேதி தகுதிபெற்ற 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணாக்கர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.அதனைத்தொடர்ந்து மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் மீது திருத்தம் செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பி.இ, பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 20,21இல் முதற்கட்டமாக, சிறப்புப்பிரிவு இடஒதுக்கீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தகுதிபெற்ற மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரரின் வாரிசுகளுக்கு ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இன்று முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு தொடங்குகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் சிறப்பு பிரிவினருக்கு இன்று முதலில் கலந்தாய்வு நடக்கிறது. அரசு பள்ளிகளில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் 28 பேர், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள் 3 பேர், விளையாட்டு பிரிவை சேர்ந்தவர்கள் 89 பேர் மற்றும் தொழிற்கல்வி 2 பேர் என மொத்தம் 124 பேர் மட்டும் இக்கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். காலை 10 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்தல் தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. இரவு 7 மணிக்கு உத்தேசம் ஒதுக்கீடு வழங்கப்படும். 21ஆம் தேதி காலையில் கல்லூரிகள் இறுதி செய்யப்பட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 21ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் 201 மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் 967, விளையாட்டு பிரிவு மாணவர்கள் 1,258 பேர் என மொத்தம் 2,426 பேர் பங்கேற்கிறார்கள். சிறப்பு பிரிவினருக்கு 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு கல்லூரிகளை தேர்வு செய்வது நிறைவுபெறுகிறது. 23-ந்தேதி காலை 8 மணிக்கு உத்தேச ஒதுக்கீடும், 24ஆம் தேதி காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு கடிதமும் வழங்கப்படுகிறது.இந்தாண்டு முதன்முறையாக கலந்தாய்வில் இடங்களைத்தேர்வு செய்யும் மாணவர்கள் 7 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தி கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும். மாணவர்கள் ஏற்கெனவே தேர்வு செய்த கல்லூரியில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்தாலும், வேறு கல்லூரியில் படிப்பதற்கு இடம் கிடைத்தால் அதில் சேர விரும்புகிறேன் எனத் தெரிவித்தாலும், அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் மாணவர் உதவி மையத்தில் செலுத்த வேண்டும். மாணவர்கள் சேர்க்கையின் பொதுசெலுத்த வேண்டிய கட்டண விவரங்களும் ஒதுக்கீட்டு ஆணையில் தெரிவிக்கப்படும். கலந்தாய்வு நான்கு சுற்றுகளில் நடைபெறும். முதலில் சேர விரும்பும் கல்லூரிகளை வரிசைப்படி விருப்பப்பட்டியல் நிரப்புதல், பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்தல் ஒதுக்கீட்டை உறுதி செய்தல், சேர்க்கையை உறுதி செய்தல்,கல்லூரியிலோ அல்லது மாணவர்கள் வசதி மையங்களிலோ கல்லூரி கட்டணத்தை செலுத்தி சேர்க்கையை உறுதிச் செய்தல், விருப்பப் பட்டியல் நிரப்புதல், விண்ணப்பதாரர்கள், தரவரிசைப் பட்டியலில் பிடித்த இடங்கள் அடிப்படையில் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர். முதலில், விண்ணப்பதாரர்கள் விருப்பப்பட்டியல் நிரப்ப வேண்டும். தங்கள் விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை வரிசைப்படி நிரப்பவேண்டும். எத்தனைக் கல்லூரிகளையும் நீங்கள் சமர்ப்பிக்கலாம். ஆனால், விருப்பங்களை வரிசைப்படியாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த விருப்பப்பட்டியலை நிரப்புவதற்கு மட்டும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும். பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்தல், தரவரிசையின்படி சமர்ப்பித்த விருப்பப்பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.இரண்டு நாட்களுக்குள் இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்.தமிழக பொறியியல் கல்லூரிகளில் சேர தரவரிசை பட்டியல் வெளியானது..ரஞ்சிதா முதலிடம்!2022:தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றுமுதல் தொடங்குகிறது
1-5 std guide | CLICK HERE |
9 std guide | CLICK HERE |
10 std guide | CLICK HERE |
11 std guide | CLICK HERE |
12 std guide | CLICK HERE |
Friday, August 19, 2022
New
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம். நமக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி
About Kalviupdate
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
School Students
Tags
12 std,
College news,
School Students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment