எத்தனைப் பள்ளிகளில் மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, August 8, 2022

எத்தனைப் பள்ளிகளில் மைதானங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு.

 தமிழகம் முழுவதும் எத்தனைப் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க வேண்டும்.


உடற்கல்வி என்பது மாணவர்களின் மேம்பாட்டுக்கு முக்கியமானது. தமிழகத்தில் எத்தனைப் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன, எத்தனை பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர் என்பன உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்ததேன். ஆனால், இந்த தகவல்களை வழங்க பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார்" என்று மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தது" உத்தரவிட்டனர்

No comments:

Post a Comment