எண்ணும் எழுத்தும் சிலபஸ் படித்து, அடுத்த வகுப்புக்கு முன்னேறும், குழந்தைகளுக்கு எப்படி கற்பிப்பது என்பது தொடர்பான ஆலோசனை, ஆசிரியர்களிடம் இருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களிடம் கற்றல் இடைவெளி ஏற்பட்டது.
இது களைய, தொடக்க வகுப்பு மாணவர்களை, பள்ளிக்கு ஆர்வமுடன் வரவழைத்து, கற்றல் திறன் மேம்படுத்த, எண்ணும் எழுத்தும் திட்டம், நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. மூன்றாம் வகுப்பு வரை, பிரத்யேகமாக இத்திட்டத்திற்கு சிலபஸ் உருவாக்கப்பட்டுள்ளது.ஆக்டிவிட்டி சார்ந்த கற்றல், கற்பித்தல் நடைமுறையில், பாடங்கள் சொல்லி கொடுப்பதால், மாணவர்கள் விளையாட்டு வழியாக, பல்வேறு தகவல்களை அறிந்து கொள்கின்றனர். எண்கள், எழுத்துகளை அறிமுகம் செய்வதோடு, பிழையின்றி வாசித்தல், எழுதுதல், அடிப்படை கணிதத்திறனுக்கு, இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை முழுமையாக, ஒன்றாம் வகுப்பில் இருந்து படித்து, நான்காம் வகுப்புக்கு முன்னேறி வரும் குழந்தைகளுக்கு, சிலபஸ் மாற்றியாக வேண்டும். இக்குழந்தைகளின் கற்றல் திறனுக்கு ஏற்ப, வகுப்பறை செயல்பாடுகள் இருந்தால்தான், பாடங்களை உள்வாங்குவதில் சிக்கல் ஏற்படாது.
இதற்காக, ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம், சென்னையில் நடந்தது. தொடர்ந்து, மாவட்ட வாரியாக முதன்மை கருத்தாளர்களாக செயல்படும், ஆசிரியர்களிடம் இதுசார்ந்து கருத்துகள் பெற்று, புதிய நடைமுறை கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.முதன்மை கருத்தாளர்கள் சிலர் கூறுகையில், 'தொடக்க வகுப்பிலே, புதிய கற்றல் முறை கொண்டு வந்ததால், அடுத்தடுத்த வகுப்புகளில், பாடத்திட்டத்தில் மாற்றங்கள் புகுத்த வேண்டியது அவசியம். அடுத்த கல்வியாண்டில், மூன்றாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகள், நான்காம் வகுப்புக்கு செல்லும் போது, புதிய நடைமுறைகள் கொண்டு வந்தால்தான், கற்றலில் தொய்வு இருக்காது. இது சார்ந்து, அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்துகள் பெற்ற பிறகு, பாடத்திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்
No comments:
Post a Comment