சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 56 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
முதலில் அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியது. அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது.
110 மையங்களில் ஆன்லைன் வழியாக நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சிறந்த கல்லூரிகளில் விருப்பப்பாடப் பிரிவுகளை தேர்வு செய்தனர்.
இரவு அவர்களுக்கு உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடங்கள் உறுதி செய்யப்பட்டன.
மாற்றுத்திறனாளிகள் 21 பேரும், முன்னாள் ராணுவத்தின் குடும்பத்தினர் 2 பேரும், விளையாட்டு பிரிவில் 36 பேருக்கும் தேர்வு செய்த கல்லூரிகள் இன்று ஒதுக்கப்பட்டன.
பிற்பகலில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு பொது சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்கிறார்கள். நாளை மாலை 7 மணி வரை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 23-ந்தேதி காலையில் உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்படும். 24-ந்தேதி காலையில் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 25-ந்தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடக்கிறது.
1-5 std guide | CLICK HERE |
9 std guide | CLICK HERE |
10 std guide | CLICK HERE |
11 std guide | CLICK HERE |
12 std guide | CLICK HERE |
Sunday, August 21, 2022
New
சிறப்பு கலந்தாய்வு: 59 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
About Kalviupdate
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
School Students
Tags
School Students
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment