மத்திய பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 2-வது கட்ட நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 4 முதல் 6 வரை நடைபெற்றது.
தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பல்வேறு மையங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆகஸ்டு 12 முதல் 14 வரை மறு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) முன்பு அறிவித்திருந்தது.
அந்த நாட்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று தேர்வு நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மத்திய பல்கலைக்கழக மறு நுழைவுத்தேர்வு ஆகஸ்டு 24 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று என்டிஏ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment