பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, August 10, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 11.08.2022

  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: குடி செயல் வகை


குறள் : 1023


குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முந் துறும்.


பொருள்:

தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்


பழமொழி :

It is the mind that makes the body rich.


உள்ளமே உடலை செழிப்பாக்கும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த பலனும் எதிர்பார்க்காமல் காரியங்கள் செய்ய முயல்வேன். 


2. வள்ளுவர் வாக்கு படி மற்றவர்கள் எனக்கு செய்த உதவிக்கு எப்போதும் நன்றி மறவாமல் இருப்பேன்.


பொன்மொழி :


உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.


பொது அறிவு :


1.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் யார் ? 


 பாத்திமா பீவி. 


 2. மகாத்மா காந்தியின் தாயார் பெயர் என்ன ? 


 புத்லிபாய்.


English words & meanings :


Pediatrician - a person who treats children, noun. குழந்தை மருத்துவர். பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :


கறிவேப்பிலையை தினமும் டீ போட்டு வெறும் வயிற்றில் குடித்து வருவது நல்லது. ஒரு மாதம் காலம் வரை இப்படி குடித்து வருவது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.


அப்படி இல்லையென்றால் காலையில் வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலையை சாப்பிட்டு வரலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உங்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.

NMMS Q 39:


பெட்ரோலுடன் எந்த ஆல்கஹாலைக் கலந்து பயன்படுத்தலாம் என மத்திய அரசு தற்போது அனுமதியளித்துள்ளது?


 விடை: எத்தனால்

நீதிக்கதை


வைரவியாபாரி


ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான். அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று, இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் என்றான். உடனே பிச்சைக்காரன், இரண்டு ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள் என்றான்.


அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் இரண்டு ரூபாய் அதிகம்! நான் உனக்கு ஒரு ரூபாய் தருகிறேன் என்றான். அதற்கு பிச்சைக்காரன், பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும் என்று சொல்லிக் கொண்டே நடந்து சென்றான். வைர வியாபாரி, எப்படியாவது அவன் தன்னிடம் அதை ஒரு ரூபாய்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 2000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.


இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன், அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் இரண்டாயிரத்தை கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோஷமாக செல்கிறாயே! நன்றாக ஏமாந்துவிட்டாய் என்றான். அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் யார் முட்டாள்..?, எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை. எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன். அதன் மதிப்புத்தெரிந்தும் வெறும் இரண்டு ரூபாய்க்காக அதை இழந்துவிட்டாய் இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்றவாறே நடக்கலானான்.


இன்றைய செய்திகள் - 11.08.22


* செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


* நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


* காரைக்குடி அருகே செட்டிநாட்டில் விமானிகள் பயிற்சி மையம் அமைக்க ஏற்பாடு.


*நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித் நியமிக்கப்பட்டுள்ளார்.


* புளோரிடாவில் உள்ள தனது வீட்டில் எஃப் பி ஐ அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் அத்துமீறல்கள் நடந்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.


* எரிவாயு இறக்குமதிக்கு ரஷியாவை சார்ந்து இருப்பதை குறைக்க ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் முடிவு செய்துள்ளது.


* காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் : தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்று சாதனை.


* ஐ.எஸ்.எல் கால்பந்து: ரஹீம் அலியை தக்கவைத்தது சென்னை அணி


* ஐசிசி டி20 தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதம் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடித்து வருகிறார்.


Today's Headlines


* Tamil Nadu Chief Minister M. K. Stalin has announced that the winning Indian teams will be given a prize of Rs 1 crore each.


*  The Chennai Meteorological Department has informed that the Nilgiris and Coimbatore are likely to receive very heavy rains.


 * Planning to set up pilot training center at Chettinad near Karaikudi.


 * Supreme Court Justice Uday Umesh Lalit has been appointed as the next Chief Justice of the country.


 * Former US President Donald Trump has accused the FBI of violations during a search of his Florida home.


 * The Council of the European Union has decided to reduce dependence on Russia for gas imports.


 * Commonwealth Fencing Championship: Tamil Nadu player Bhavani Devi wins gold.


* ISL Football: Chennai retain Rahim Ali


 * Indian player Suryakumar Yatham continues to remain at the 2nd position in the list of best batsmen in the ICC T20 rankings.

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment