அரசாணை 101 மற்றும் 108 ஆகியவை ரத்தால் நடைபெறப் போகும் மாற்றங்கள் என்னென்ன ஒரு பார்வை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, August 5, 2022

அரசாணை 101 மற்றும் 108 ஆகியவை ரத்தால் நடைபெறப் போகும் மாற்றங்கள் என்னென்ன ஒரு பார்வை

 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுயநிதி பள்ளிகளுக்கு என மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர்


ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளுக்கு ஏற்ப ஒன்று அல்லது இரண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் (செகண்டரி எஜுகேஷன்) நியமிக்கப்பட உள்ளனர்கள்.


சேலம் திருவண்ணாமலை போன்ற மிகப் பெரிய மாவட்டங்களுக்கு இரண்டு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் பிற மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளார்கள்.


தற்பொழுது 125 என எண்ணிக்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடம் கூடுதலாக 28 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.


500 பள்ளிகளுக்கு ஒரு மாவட்ட கல்வி அலுவலர் என்ற வரையறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று 50 பள்ளிகளுக்கு ஒரு வட்டார கல்வி அலுவலர் என்ற நிலையில் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாக தற்பொழுது உள்ளதை விட கூடுதலாக 40 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட உள்ளார்கள்.


தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள்.


 இடைநிலை கல்வி மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் செயல்படுவதோடு நேரடியானபள்ளிக்கல்வி இயக்குனர் அல்லது தற்போது உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் கண்ட்ரோலில் செயல்படுவார்கள்.


தற்பொழுது உள்ள முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் பல பணி அதிகார்ங்கள் குறைக்கப்படுகின்றன.


கூடுதலாக மூன்று இணை இயக்குனர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன.


அரசாணை 145 வளாகப் பள்ளிகள் அரசாணை 202 குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் என வரையறுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.


குறுவள மையம் பயிற்சி அளிப்பதற்கும் பிற ஆலோசனைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன.


உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது நடைமுறையில் உள்ள தொடக்க நடுநிலை உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மீதான கண்காணிப்பு அறவே நீக்கப்படுகிறது.


ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலருக்கும் இரண்டு கண்காணிப்பாளர் மற்றும் ஒவ்வொரு கண்காணிப்பாளருக்கும் இரண்டு உதவியாளர்கள் என நியமிக்கப்பட உள்ளார்கள்.


அனைத்து வட்டார கல்வி அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு டைப்பிஸ்ட் ஒரு ஜூனியர் அசிஸ்டன்ட் என பணியிடம் உருவாக்கப்பட உள்ளது.


மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மட்டும் ஒரு கண்காணிப்பாளர் ஒரு உதவியாளர் ஒரு ஜூனியர் அஸிஸ்டெண்ட் ஒரு டைப்பிஸ்ட் என்ற நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.


மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாவட்டத்தில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளை வட்டார கல்வி அலுவலர்களின் துணையோடு தீர்த்து வைப்பார் அவருக்கு உயர் அலுவலராக நேரடியாக தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்படுவார்.


முதன்மை கல்வி அலுவலர் 2017 ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போல பார்வை அலுவலராக மட்டுமே செயல்பட உள்ளார்கள்.


மேற்கண்ட அனைத்து முன்மொழிவுகளுக்கும் உண்டான நிதி துறை அனுமதி பெறப்பட்டு கோப்பு முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


 ஏறக்குறைய இன்னும் பத்து நாட்களுக்குள் புதிய நிர்வாகக் கட்டமைப்பு நடைமுறைக்கு வரும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளதாக அறிகிறோம்.

No comments:

Post a Comment