திராவிடர் பேரியக்கத்தின் கருத்துகளை, கொள்கைகளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட திராவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. திராவிட பள்ளி மாணவர் சேர்க்கைக்கான கடைசி நாள் செப்டம்பர் 10-ந் தேதி என அதன் இயக்குநர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.திராவிட பள்ளியின் இயக்குநர் திராவிடர் இயக்க பேராசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிட பள்ளியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி மா.உமாபதி.திராவிட இயக்கதின் வரலாறு, கோட்பாடு, திராவிட இயக்கத்தின் தாக்கம் ஆகியனவற்றை ஒவ்வொரு ஆண்டும் 500 மாணவர்களுக்காவது, ஒரு பாடமாக எடுத்து, அவர்களை திராவிடச் சித்தாந்ததிற்குள் கொண்டு வர வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு திராவிடப் பள்ளி. திராவிட இயக்கத்தின் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுவோம். திராவிட கருத்தியலை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ளுவோம். திராவிடத் தமிழர்களாக இந்த மண்ணில் வாழ்வோம் என்பதும் இப்பள்ளியின் அடிப்படை நோக்கமாகும். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி தந்தை பெரியார் பிறந்த நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடப் பள்ளியை தொடங்கி வைத்தார்.முன்னாள் துணைவேந்தர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், திராவிட இயக்க ஆய்வாளர்கள் மூலமாக திராவிடப் பள்ளி வகுப்புகளுக்கான பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இணைய வழியிலும் இந்தப் பாடங்கள் நடத்தப்படுகின்றனன. திராவிடப் பள்ளியில் தொடக்க நிலை, முதுநிலை என இரண்டு நிலைகள் மட்டுமே உள்ளன. தொடக்க நிலைப் பாடங்கள், வினா-விடை வடிவத்தில் எளிமையான அறிமுகமாக இருக்கும். முதுநிலைப் பாடங்கள், சற்று விரிவாகவும், விவாதங்களாகவும், ஆய்வு நோக்கோடும் அமைந்திருக்கும். விண்ணப்பப்படிவம் ஏற்கப்பட்டவுடன், பதிவு எண் கொடுக்கப்படும்; அதன்பிறகு பாடப்புத்தகங்கள் மாணவர்களின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். இணையவழி கல்வி முறையில் அனைத்து பாடங்களுக்கும் இணைய வழியில் () மூலமாக வகுப்புகள் நடத்தப்படும். திராவிடப் பள்ளியின் செயல்பாடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு நிறுவனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறுகையில், முதலாண்டில் 516 நண்பர்கள் பள்ளியில் இணைந்தனர். தொடக்க நிலையில்தான் மிகுதியானவர்கள் இணைந்தனர். அவ்வாறு தொடக்க நிலையில் இணைந்த முன்னூறுக்கும் மேற்பட்டவர்களில், பெரும்பான்மையானவர்கள் அரசியல் தளத்திற்கு வெளியில் நின்றவர்களாகவும், இளைஞர்களாகவும் இருந்தமை கண்டு மகிழ்ந்தோம். நம் நோக்கம் அதுதான். அடுத்தடுத்த தலைமுறையினரைத் திராவிட இயக்கம் நோக்கி அழைத்து வருவதே திராவிடப்பள்ளியின் தலையாய எண்ணம் என்பதால், புதுப்புனலின் வருகை, நமக்குத் பேருவகை ஆயிற்று. சற்றொப்ப 40 பேர் வெளிநாட்டினர். அதுவும் மகிழ்ச்சியே!திராவிட இயக்கத்தின் வரலாறு, கோட்பாடுகள், தாக்கம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு பாட நூல்கள் தயாராயின. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இணைய வகுப்புகளும் நடந்தன. ஓராண்டு நிறைவு பெற்ற வேளையில், கடந்த 8 ஆம் நாள் (08.08.2021) மூன்று நிலையினருக்கும் தேர்வுகள் நடத்தப்பெற்றன. ஆர்வத்துடன் பள்ளியில் இணைந்தனர் என்றாலும், அவர்களுள் எத்தனை பேர் தேர்வுகளை எழுதுவார்களோ என்ற ஐயம் எங்களுக்கு இருந்தது, இந்தத் தேர்வை எழுதி வெற்றி பெறுவதனால் என்ன பயன் என்று கருதி எழுதாமல் விட்டுவிடுவார்களோ என்ற கவலை இருக்கவே செய்தது. ஆனால் எங்கள் கவலையைப் பொய்யாக்கி, ஏறத்தாழ 300 பேர், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு எழுதியுள்ளனர் என்பது பள்ளிக்குப் பெருமை சேர்க்கிறது. முறையாகப் பாடத்திட்டங்களை வகுத்து, உரியவர்களிடம் எழுதி வாங்கி, அச்சிட்டு, அனைவருக்கும் அஞ்சல் வழியிலும், இணைய வழியிலும் அனுப்பிவைத்து, சென்று சேர்ந்து விட்டதா என்று சரி பார்த்து, இறுதியாக வினாத்தாள்களைத் தயாரித்து, தேர்வையும் நடத்தியுள்ள திராவிடப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்களின் பணி மிகப் பெரியது. ஓரிருவர் செய்துவிடக் கூடிய பணியன்று இது! தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் மா. உமாபதி வழிகாட்டலில், முப்பதுக்கும் மேற்பட்ட பேரவைத் தோழர்கள் குழுக்களாகப் பிரிந்து இப்பணியைச் சிறப்புற ஆற்றி முடித்த்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு திராவிடப் பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. திராவிடப் பள்ளி இணையத்தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து; முழுமையாக நிரப்பி திராவிடப் பள்ளி முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பவும். விண்ணப்ப படிவத்துக்காக இணைய முகவரி:இணையவழியில் விண்ணப்பிக்க..: திராவிடப் பள்ளியில் இணைவதற்கான கட்டணம்: ரூ1,500திராவிடப் பள்ளியில் சேருவதற்கான இறுதி நாள்: செப்டம்பர் 10''.
No comments:
Post a Comment