பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, August 3, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.08.2022

 _20180701_211806


திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: நன்றியில் செல்வம்


குறள் : 1010

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறங்கூர்ந் தனையது உடைத்து.


பொருள்:

பிறர்க்குக் கொடுத்துப் புகழ்மிக்கவர் ஆகிய செல்வர்கள் சிறிது காலம் வறுமைப்பட நேர்ந்தால், அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போலாகும்.


பழமொழி :

Everything comes to him who waits.


காக்கத் தெரிந்தவனுக்குக் காரியம் கைகூடும்


இரண்டொழுக்க பண்புகள் :


1. கடவுள் எல்லோருக்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் அதை வீண் அடித்தவன் ஏழை பயன் படுத்தியவன் பணக்காரன். 


2. நம்மை அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்க்காமல் நான் கடவுளால் தனித் தன்மையோடு அற்புதமாக படைக்க பட்டவன் என்று எண்ணி வாழுங்கள். வாழ்க்கை சிறக்கும்


பொன்மொழி :


மனிதராகப்  பிறந்த எல்லோரும் தவறு செய்கிறார்கள். மூடர்களோ அதை தொடர்ந்து செய்கிறார்கள்....புத்தர்


பொது அறிவு :


1. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்? 


பச்சேந்திரி பால். 


2. நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு எது? 


கணையம்


English words & meanings :


lac·er·at·ed - to tear roughly;adjective, வேகமாக கிழித்தல், பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :


வைட்டமின் பி6 என்பது கிளை ஆக்சைலேட்டின் வளர்சிதை மாற்றம் உட்பட பல்வேறு வளர்சிதை மாற்றங்களில் பயன்படுகிறது. இதன் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக வாய்ப்புள்ளது.

கேரட், பால், ரிக்கோட்டா சீஸ், வெண்ணெய், வாழைப்பழங்கள், சால்மன் மற்றும் கோழி போன்ற உணவுகளில் வைட்டமின் பி6 காணப்படுகிறது.

NMMS Q 39:


33 1/2% இன் தசம வடிவம் _______ 


விடை: 0.36


ஆகஸ்ட்  04 இன்று


பராக் உசைன் ஒபாமா  அவர்களின் பிறந்தநாள்


பராக் உசைன் ஒபாமா (Barack Hussein Obama, பிறப்பு: ஆகத்து 4, 1961), அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44வது அரசுத்தலைவரும் ஆவார். 2008 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட் ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.[1] அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) இலினொய் மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.


நீதிக்கதை


இரண்டு அணில்கள்


இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறை சிந்தனை செய்துவிட்டு செய்வதும் ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது. திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும்.


அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை. உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும் கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி என்றது.


இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டார் என்று கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல் என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது. பக்தியுள்ள அணில் சொன்னது, கடவுளை நம்புகிற நாங்கள் எல்லாம் துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவது இல்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போவதும் இல்லை.


அதனால் கடவுள் என்னை கீழே தள்ளி விட்டாலும் அதிலும் காரணம் இருக்கும் என்றது. ஆமாம். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுவதில்லை. மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி விண்ணை நோக்கி கடவுளே இந்த அவமானத்துக்கும் வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்துவிடு என்றது. அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.


அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது. சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடம் ஏது.


இன்றைய செய்திகள் - 04.08.22


∆ குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்கள்  இடத்து விலகி இருக்க வேண்டும் - ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு


∆ தமிழகத்தில் ஆகஸ்டு 6 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

--வானிலை மையம் அறிவிப்பு.


∆ CAT தேர்வு ஆன்லைன்னில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 13 வரை அவகாசம்


∆ சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏ பிரிவில்  வைசாலி 

  ஹரி கிருஷ்ணா, 

 பி பிரிவில் வீரர் குகேஷ், 

சி  பிரிவில் அபிஜித் குப்தா ஆகியோர் வெற்றி


∆ பளுதூக்குதல் போட்டியின் 109 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலம் வென்றார்


Today's Headlines


∆ Stay away from people suffering from monkey measles - Union Health Department advised. 


 ∆ Widespread rain is likely to occur in Tamil Nadu till August 6.

 --Weather Center Announcement.


∆ Last date to apply online for CAT exam is 13th August


 ∆ International Chess Olympiad in A section Vaisali Hari Krishna,  

B section player Gukesh and

 Abhijit Gupta wins in C category


∆ India's Lovepreet Singh wins bronze in 109kg weightlifting event

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment