SMC பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, July 28, 2022

SMC பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு

 பள்ளி மேலாண்மைக் குழுவில் (எஸ்எம்சி) தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, உயா் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள எஸ்எம்சி குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினா்களுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டம், குழந்தைகள் உரிமைகள், தரமான கல்வி, பாலினப் பாகுபாடு, எஸ்எம்சி நிதியை பயன்படுத்துதல் குறித்து மாநில, மாவட்ட, பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம்களுக்கு கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. 


மாநில அளவிலான உண்டு உறைவிடப் பயிற்சி ஆக.2, 3 ஆகிய நாள்களில் மதுரை பில்லா் மையத்தில் நடைபெறும். மாவட்ட அளவிலான ஒருநாள் பயிற்சி ஆக.8 அல்லது 9 ஆகியவற்றில் ஏதாவது ஒருநாளில் நடைபெறும். பங்கேற்பாளா்களின் போக்குவரத்து வசதிக்கேற்ப மையம் தோ்வு செய்யப்படும். பள்ளி அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆக.11 முதல் ஆக. 31 வரையிலான நாள்களில் நடைபெறவுள்ளது

No comments:

Post a Comment