மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 8, 2022

மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள்

 தலைமை ஆசிரியர்களின்  அன்பான கவனத்திற்கு! 


நேற்று முன்தினம் திருவாரூரில் நடைபெற்ற மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள் 

எண்ணும் எழுத்தும் வகுப்பறை அனைத்து களங்களையும்(story Corner. Song corner etc....    ) உள்ளடக்கி இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும் 

 Learning corners பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி வாரந்தோறும்  துணைக்கருவிகள் உடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்

 கதைக்களம் ஆனாலும் சரி பாட்டு களமாக இருந்தாலும் சரி அல்லது படிப்பு களமாக இருந்தாலும் அதன் அருகே செல்லும்போது அந்த மாணவனுக்கு கதை சொல்லவோ பாடல் பாடவோ அல்லது அதை பார்க்கும்போது வாசிக்கவோ தோன்றக் கூடிய அளவில் கவர்ச்சிகரமாக வகுப்பறைச் சூழல் அமைய வேண்டும் 

எண்ணும் எழுத்தும் வகுப்பறையை எப்படி வைப்பது என்பதனை யூடியூப் வாயிலாகவும் இணையத்தின் வாயிலாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள டெலிகிராம் குரூப் வாட்ஸ் அப் குரூப் ஆகியவற்றின் மூலமாக ஆசிரியர்கள் அறிந்துகொண்டு நேர்த்தியாக அமைத்திட வேண்டும்.

 அனைத்து பாடத்திற்கும் கற்றல் விளைவுகள் வெளிப்படக்கூடிய விதத்தில்  பாட போதனை அமைந்திருப்பதை ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும் 

முதலில் ஆசிரியர் தான் நடத்துகிற பாடத்தின்  கற்றல் விளைவுகளை நன்கு அறிந்தும் பாட குறிப்பேட்டில் எழுதியும் இருந்திட வேண்டும்.

கற்பிக்கப்படும் எல்லா படங்களின் திறன்களையும்             உட்திறன்களையும் ஆசிரியர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும் 

எல்லா செயல்பாடுகளிலும் வகுப்பில் உள்ளமெல்ல கற்கும் மாணவர்கள் உட்பட  அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் 

பாடம் நடத்தப்படும் போது சிறப்பாக செய்யும் மாணவர்களை பாராட்ட வேண்டும் 

ஆய்வாளர்கள் பள்ளியை பார்வையிடும்போதும் மற்றும் எல்லா பாடவேளைகளிலும்  எண்ணும் எழுத்தும் முறையில் கற்பிக்கப்படும் வகுப்புகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பாடம் நடத்துவதற்கு ஏற்ற வகையில் முன் தயாரிப்புடன் இருந்திட வேண்டும் 

எண்ணும் எழுத்தும் முறையிலான பாட போதனை  சரியாக இல்லாத பள்ளிகளில்  பாடஆசிரியரும் தலைமை ஆசிரியரும் பொறுப்பாவார்கள் 

ஆசிரியர்களுடைய வருகையும் மாணவர்களுடைய வருகையும் தினசரி இணையத்தில் பதிவு செய்வதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இணையத்தில் பதிவு செய்யப்படாத ஆசிரியர் மாணவர் வருகை நாட்கள் பணிக்கு வராத நாட்களாக கருதப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

தொடர்ந்து விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் 

பணியில் ஆர்வம் இல்லாமலும் மாணவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாத  ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிட வேண்டும் 

 எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறைக்கான ஆசிரியர் கையேட்டில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மாணவர்களுக்கு செய்து காட்டப்பட வேண்டும் 

மாணவர்கள் செயல்பாடுகளை அவர்களாகவே  செய்வதற்கு பயிற்றுவிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளையும்  கண்காணித்து கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும் 

CRC பயிற்சி உள்பட அனைத்து பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பங்கேற்று வேண்டும் 

பயிற்சியில் கூறப்படுகிற முறைகளை வகுப்பறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.பயிற்சியில் எடுக்கின்ற  குறிப்புகள் அடங்கிய குறிப்பேடு அனைத்து ஆசிரியர்களின் மேசையிலும் பாட குறிப்புடன  இருந்திட வேண்டும் . 

தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .

அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை உயர்த்துவதற்கு பாடுபட வேண்டும் .

மேற்கண்ட விவரங்களை பள்ளியின் சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியர்களின்  பார்வைக்கு  வைப்பதற்கும் தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமையாசிரியர்கள் ஆவன செய்திட வேண்டும் 

No comments:

Post a Comment