விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயம் செய்தோம். ஆனால் இலக்கை தாண்டி 3.19 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் 4.80 லட்சம் பேர் என்ற இலக்கு தாண்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.9.83 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார் என்றார்.
No comments:
Post a Comment