திருவாரூர் மாவட்டம் முத்து பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செல்வம் என்பவர், தனது ட்விட்டர் கணக்கில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், தனது மாணவன் தினேஷ் என்பவர், லாரி சக்கரத்தில் மாட்டி விபத்துக்கு உள்ளதாகவும். அதை தான் நேரடியாக கண்டு தூக்கமில்லாமல் தவித்ததாகவும். அவரது குடும்பம் பொருளாதாரம் வாரியாக பின்தங்கியுள்ளதால், சிகிச்சைக்கு தவித்த மாணவனின் குடும்பத்திற்காக நிதி உதவி தேவை எனவும், சிகிச்சைக்காக சுமார் 10 லட்சம் வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், ட்விட்டரைத் தவிர வேறெதிலும் இந்த பதிவை பகிரவில்லை. இதையடுத்து, செய்தி பகிரப்பட்ட சில நிமிடங்களில் 11 வயது மாணவனின் உயிரைக்காக்க மனிதநேயம் உள்ள மனிதர்கள் அடுத்தடுத்து பணம் செலுத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம் 7,68082 ரூபாய் மாணவனின் அம்மா வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. நேற்று முழு பணமும் கிடைத்ததை அடுத்து மாணவருக்கு தேவையான சிகிச்சை மருத்துவமனையில் சரியான நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று மீண்டு தனது ட்விட்டர் பதிவில், மாணவரின் உடல்நலம் குறித்த ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "மாணவன் தினேஷ்-க்கு நான்கு அறுவை சிகிச்சை முடிந்து உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.உங்களின் ஈகை உள்ளத்தால் மருத்துவ செலவிற்கான நாம் திரட்டிய தொகையில் 80 சதவீதம் வந்துவிட்டது.மீதமுள்ள தொகைக்கு வாய்ப்புள்ள அன்பு உள்ளங்கள் இயன்றதை வழங்க அன்புடன் வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment