அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு - சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, July 31, 2022

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு - சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடக்கம்


தமிழகத்தில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்த திட்டமிட்டுள்ளது.பொறியியல் படிப்புகளில் சேர பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் சிறப்பு மையங்கள் வாயிலாகவும் கடந்த 27ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து 115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.பொறியியல் படிப்பில் ://./ சேர என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் இதற்கான கால அவகாசம் கடந்த மாதம் 19ஆம் தேதி முடிவடைந்தது. இருப்பினும் சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 22ஆம் தேதி வெளியானதால் பொறியியல் படிப்புகளில் சேர 27 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பொறியியல் படிக்க 2,11,905 மாணவர்கள் விண்ணப்பம்..சான்றிதழ் பதிவேற்றம் செய்ய இன்றே கடைசி நாள் இந்நிலையில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது. சுமார் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடைபெறுகிறது.விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் வரும் 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க 2042 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 250 பேர் என்ற அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்த திட்டமிட்டுள்ளது. விரைவில் ரேண்டம் எண்ணும், தர வரிசை பட்டியலும் வெளியாகும். அதன் பின்னர் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment