இந்தியா முழுவதும் 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளது.இதற்கான அனுமதி அட்டைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு..தேர்வு மையங்களின் முழு விபரங்களை வெளியிட்ட தேசிய தேர்வுகள் முகமைதேர்வுக்கான வழிகாட்டுதல்இந்நிலையில் நாளை நடத்தப்படும் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும் என்றும், அதனின் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனஅறிவுறுத்தியுள்ளது.
நாளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான சோதனை
நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்காக பெறப்பட்டுள்ள நிலையில், அதில் 90% மாணவர்கள் மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது மதியம் 12:30 மணிக்கு வந்துவிட வேண்டும். அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். பெண் தேர்வர்கள் , பெண் பணியாளர்களால் மூடப்பட்ட அறைகளுக்குள் சோதனை செய்யப்படுவர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1 லட்சத்து 42 பேர் தேர்வெழுதவுள்ளன.
ஆடைக் கட்டுப்பாடுகள்
1. நீண்ட கைகளுடன் (புல் ஹேண்ட்) கூடிய லேசான ஆடைகள் அணிந்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதியில்லை.
2. குறைந்த குதிகால் (ஹீல்ஸ்0 கொண்ட செருப்புகள் மற்றும் செருப்புகள் அனுமதிக்கப்படும், ஹூக்களுக்கு அனுமதியில்லை.
3. பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
4. கைக்கடிகாரம், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.தேர்வு தேதி மற்றும் நேரம்நீட்தேர்வு (2022) ஜூலை 17 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறும்.
மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை
2022 அட்மிட் கார்டுடன், விண்ணப்பதாரர்கள் மைய விவரங்கள், சுய அறிவிப்பு அல்லது உறுதிமொழி, தண்ணீர் பாட்டில், அஞ்சலட்டை (4'6') அளவு புகைப்படம், சானிடைசர் (50 மில்லி), புகைப்பட அடையாளச் சான்று, என்95 மாஸ்க் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்
எடுத்துச் செல்லக்கூடாதவை
மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட உட்பட எந்தவொரு தனிப்பட்ட உடமைகளையும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.கோவிட்-19 ஆலோசனைவிண்ணப்பதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் மையத்தில் வழங்கப்படும் -95 முகமூடிகளைப் பயன்படுத்த வேண்டும். சானிடைசர்கள் உபயோகித்துக் கொள்ளலாம். உடல் வெப்பநிலை அதிகமிருந்தால் தனி அறைகளில் தேர்வெழுதலாம்
No comments:
Post a Comment