தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறைகள் உட்பட பல்வேறு துறைகள் மூலம் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு துறைகள் சார்பிலும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது, ஒப்பந்தப்புள்ளி கோருதல் போன்ற பணிகளில் கண்காணிப்பாளர்கள் நிலையிலான அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள்.அவர்கள் தான், தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகளுக்கு அதன் விவரங்களை அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகு, கருவூலத்துறை சார்பில் நிதி விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக கருவூலம், மற்றும் கணக்கு துறைகளில் காலி பணியிடங்களால் இப்பணிகளை விரைந்து முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஐந்து ஆண்டுகள் கண்காணிப்பாளர் பணி முடித்தவர்களை கணக்கு அலுவலராக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.காலிப்பணியிடங்கள் :கணக்கு அலுவலர் பணிக்கும் தமிழகம் முழுவதும் சுமார் 23 (17 முன்கொணரப்பட்ட காலிப்பணியிடங்கள் உட்பட)ஊதிய விபரம் :பல்வேறு தேர்வு நடைமுறைகளுக்குப் பிறகு பணியமர்த்தப்படும் கணக்கு அலுவலர்களுக்கு அரசின் நிலை 23ன் படி 56,900 ரூபாய் முதல் 2,09,200 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும்விண்ணப்பிப்பது எப்படி ?விண்ணப்பதாரர்கள் ... / .. ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
*15.07.2022ஆம் தேதியன்று கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி சார்பில் வெளியிடப்பட்டது.
*13.08.2022 ஆம் தேதிக்குள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் *08.10.2022ஆம் தேதி விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும்
விண்ணப்பதாரர்களுக்கான தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு தமிழ் மொழி அறிவு இருக்க வேண்டும். சிஏ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளர்கள்(சாட்டர்டு அக்கவுண்ட்) நடத்திய இறுதித் தேர்வில் தேர்ச்சி அவசியம்தேர்வுக்கான கட்டணம்:*விண்ணப்பதார்கள் இந்த தேர்வுக்காக கட்டணமாக 200 ரூபாய் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவுக் கட்டணம் 150 ரூபாய் செலுத்த வேண்டும் *ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு நடைமுறை :
டிஎன்பிஎஸ்சி விதிமுறைகளின் படி விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியில் தேர்வு நடைபெறும். கொள்குறி வகைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மொத்தம் 810 மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.
வயது வரம்பு :01.07.2022 விண்ணப்பதாரர்களுக்கு 32 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்அருந்ததியர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பினர், சீர்மரபினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
No comments:
Post a Comment