ரயில் கேன்சல்.. எக்ஸாம் போயிடுச்சே.. கலங்கிய மாணவர்! உடனே கார் ரெடி செய்த ரெயில்வே துறை.. செம! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, July 15, 2022

ரயில் கேன்சல்.. எக்ஸாம் போயிடுச்சே.. கலங்கிய மாணவர்! உடனே கார் ரெடி செய்த ரெயில்வே துறை.. செம!

மழையின் காரணமாக ரெயில் ரத்து செய்யப்பட்டாலும், ரெயில்வே அதிகாரிகள் செய்த உதவியால் உரிய நேரத்தில் மற்றொரு ரெயிலை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்ததாக ஐ.ஐ.டி மெட்ராஸ் மாணவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவால் பலரும் ரெயில்வே நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்.இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவி வருவது ரெயில் பயணம் தான் என்றால் மிகயாகாது. அந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கை பயணத்தோடு நெருங்கிய தொடர்பு ரெயிலுக்கு உண்டு.ஏனெனில் குறைந்த கட்டணம், பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணம் போன்ற காரணத்தால் மக்கள் அதிகம் நாடுவது ரெயிலைத்தான். இத்தகைய ரெயில் பயணத்தில் பயணிகள் பலரும் மறக்க முடியாத நினைவுகளையும் கசப்பான நிகழ்வுகளையும் சந்தித்திருக்கக் கூடும்.சென்னை ஐ.ஐ.டி மாணவர்அந்த வகையில் மழையால் ரெயில் ரத்து செய்யப்பட்டாலும், ரெயில்வே அதிகாரிகள் செய்த உதவியால் உரிய நேரத்தில் மற்றொரு ரெயிலை பிடித்து சென்னைக்கு வந்து சேர்ந்ததாக சென்னை ஐ.ஐ.டி மாணவரான சத்யம் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.கடைசி நேரத்தில் ரெயில் ரத்து செய்யப்பட்டதுஅந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-சென்னை ஐ.ஐ.டி மெட்ராஸில் ஏரோனெட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறேன். சென்னை செல்வதற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகர் ரெயில் நிலையம் வந்தேன். நான் செல்ல விருந்த ரெயில், கனமழையால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கிய காரணத்தால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. வதோதரா சென்று அங்கிருந்து சென்னை செல்ல திட்டமிட்டு இருந்தேன். ஆனால், சரியான நேரத்தில் வதோதரா செல்வது எப்படி என தெரியாமல் திகைத்து நின்றேன். அப்போது இதைக்கவனித்த ரெயில்வே அதிகாரிகள், ஒருவர், உடனடியாக ஒரு காரை வாடகைக்கு எடுத்து என்னை அனுப்பி வைத்தனர்.சரியான நேரத்திற்கு அழைத்து சென்றார்அந்த வாடகை கார் ஓட்டுநரும் என்னை கவலைப்படாதீர்கள்... உரிய நேரத்தில் வதோதராவுக்கு போய் விடலாம் எனக்கூறி சரியான நேரத்தில் வதோதரா ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். வதோதரா ரெயில் நிலையத்தில் நான், இறங்கியதும் அங்கிருந்த ரெயில்வே அதிகாரிகள் நான் செல்ல இருக்கும் ரெயில் எந்த பிளாட்பாரத்தில் நிற்கிறது எனக் கண்டுபிடிக்க உதவி செய்தனர். எனது லக்கேஜ்களையும் எடுத்துவர உதவினர்.ரெயில்வேக்கு பாராட்டுரெயில்வே அதிகாரிகளின் இத்தகைய உதவியால் நான் சரியான நேரத்தில் ரெயிலை பிடிக்க முடிந்தது. ரெயில்வே அதிகாரிகளின் இந்த செயல் ஒவ்வொரு பயணியின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது' என்றார். பயணி மீது ரயில்வே அதிகாரிகள் காட்டிய இந்த அக்கறை சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்திய ரெயில்வே நிர்வாகத்தின் செயலை பாராட்டி வருகின்றனர். வதோதரா ரெயில்வே நிர்வாகத்தின் டுவிட்டர் பக்கமும் சத்யம் பகிர்ந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது..

No comments:

Post a Comment