அனுமதியின்றி விடுமுறை.. 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, July 18, 2022

அனுமதியின்றி விடுமுறை.. 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.கள்ளக்குறிச்சி அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, பள்ளி விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.! மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்துள்ளனர். மாணவியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போன்ற போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.


கள்ளக்குறிச்சி கலவரம்


ஞாயிறன்று மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. போலீசாரை நோக்கி கற்களை வீசி அவர்கள் தாக்க தொடங்கினர். பதிலுக்கு போலீசாரும் கற்களை வீசி தாக்கியும் தடியடி நடத்தியும் அவர்களை கலைக்க முயன்றனர். இதற்கிடையே, மாணவி படித்த பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர்.


பேருந்துகளுக்கு தீ வைப்பு


பள்ளி பேருந்துகளுக்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி வளாகத்தில் இருந்த 10 க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கள்ளக்குறிச்சி தாலுகா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சின்னசேலம், நயினார்பாளையம் பகுதியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


சிபிசிஐடி விசாரணை


கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதியதாக கடிதம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், தன்னை வேதியியல் துறை ஆசிரியர், கணித ஆசிரியர் என இருவரும் தொல்லை கொடுத்ததாகவும், தான் நன்றாக படித்ததாகவும், ஆனால் படிக்கவில்லை என கூறி அந்த இரு ஆசிரியர்களும் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


5 பேர் கைது



தான் சரியாக படிப்பதில்லை என மற்ற ஆசிரியர்களிடம் அவதூறு பரப்பியதாகவும் மாணவி குற்றம்சாட்டியுள்ளார். தாய், தந்தைக்கு சாரி சொல்லி அவர் அந்த கடிதத்தை முடித்துள்ளார். இந்த கடித த்தின் அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பள்ளிகள் மூடல்


தனியார் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை முதல் தமிழகத்தில் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் இயங்காது, கள்ளக்குறிச்சி பள்ளி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். தனியார் பள்ளிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரசு எச்சரிக்கை


தனியார் பள்ளிகள் மூடப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்தது.


987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்


இதனிடையே கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிக் பள்ளி மீதான தாக்குதலைக் கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்த 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி, விடுமுறை அறிவித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. பள்ளிகளின் விளக்கத்தைப் பொருத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.ஸ்டிரைக் வாபஸ்இந்த நிலையில் வேலை நிறுத்தம் தொடர்பாக பள்ளி கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சவாத்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை முதல் பள்ளிகள் இயக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment