ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை – முழு பட்டியல் இதோ!
ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினம் உட்பட நாடு முழுவதும் உள்ள வங்கிகள் ஒன்பது நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விடுமுறை நாட்களுக்கான முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
வங்கி விடுமுறைகள்:
ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகைகள் மற்றும் சுதந்திர தின விடுமுறைகள் உட்பட நாடு முழுவதும் உள்ள வங்கிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும். குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் சனி மற்றும் ஞாயிறு மட்டும் சேர்த்து ஆறு விடுமுறை நாட்கள் இருக்கும். மேலும், ஆகஸ்ட் மாதம் மற்ற மூன்று வங்கி விடுமுறைகள் ஆகஸ்ட் 9 (செவ்வாய்கிழமை) அன்று வரும் முஹர்ரம், ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை) சுதந்திர தினம் மற்றும் ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) அன்று ஜென்மாஷ்டமி ஆகியவை அடங்கும்.
வங்கி விடுமுறைகள் இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) நான்கு வகைகளின் கீழ் தீர்மானிக்கப்படுகிறது. தேசிய விடுமுறைகள் தவிர, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளுடன் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகள் மூடப்படும். மாநில வாரியாக பண்டிகை விடுமுறையை ஒட்டி வங்கிகளும் மூடப்பட்டுள்ளன. வங்கி விடுமுறைகள் பிராந்தியம் மற்றும் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு வங்கிகளில் வேறுபடலாம். மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளை பொறுத்து விடுமுறைகள் வேறுபடுகின்றன.
விடுமுறை பட்டியல்:
ஆகஸ்ட் 7 – ஞாயிறு
ஆகஸ்ட் 9 (செவ்வாய்) – முஹர்ரம்
ஆகஸ்ட் 13 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 14 – ஞாயிறு
ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை) – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) – ஜென்மாஷ்டமி
ஆகஸ்ட் 21 – ஞாயிறு
ஆகஸ்ட் 27 – நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 28 – ஞாயிறு
No comments:
Post a Comment