5 மாவட்டங்களுக்குஆரஞ்ச் அலெர்ட்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, July 28, 2022

5 மாவட்டங்களுக்குஆரஞ்ச் அலெர்ட்!

 திருச்சி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், வரும் 1ம் தேதி மிக கன மழை பெய்வதற்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' விடப்பட்டுள்ளது.


தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னையில் இன்று சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், சேலம், கரூர், நாமக்கல், வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.


நாளையும், நாளை மறுநாளும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.வரும் 1ம் தேதி பெரம்பலுார், அரியலுார், கடலுார், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என்பதற்கான ஆரஞ்ச் அலெர்ட் விடப்பட்டு உள்ளது; மற்ற மாவட்டங்களில் கன மழை பெய்யும். கடந்த, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் சித்தம்பட்டியில், 10 செ.மீ., மழை பெய்துஉள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment