கொரோனா தடுப்பூசி
இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் அதனை ஆய்வு செய்யுமாறு,
பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். ஆனால் ஆய்வின் போது ஜிதேந்திரா இல்லை என்றும் அவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வந்தன.
இருப்பினும், மத்திய அரசின் “ஒரு ஊசி, ஒரு முறை” என்ற உறுதிமொழியை மீறியதாக ஜிதேந்திரா மீது சாகர் மாவட்ட நிர்வாகம் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது. மேலும், தடுப்பூசி பொருள்களை காலையில் பொறுப்பிலிருந்த மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷன் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு - WHO
உலக சுகாதார அமைப்பு – WHO
எச்.ஐ.வி பரவத் தொடங்கியதிலிருந்து, 1990 முதல் ஒருமுறை பயன்படுத்துவதற்கான டிஸ்போசிபிள் சிரிஞ்ச்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு உட்பட சர்வதேச நிறுவனங்களும் இதையே அறிவுறுத்துகின்றன. 2021, ஜனவரியில் இந்திய முழுவதும் தடுப்பூசி போடும் தொடங்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் `ஒரு ஊசி, ஒரு முறை’ என்ற நெறிமுறையை வலியுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment