பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, July 25, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022

  _20180701_211806

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022

  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள் எண் : 994


குறள்:

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.


பொருள்:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.


பழமொழி :

A crafty fellow never has any peace.

குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 


2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :


இளமைக் காலத்தில்

கல்வியை புறக்கணித்தவன்

எதிர்கால வாழ்வை இழந்தவன்

ஆகிறான்.


பொது அறிவு :


1.விஷக்கொசுக்கள் எங்கே விருத்தியாகின்றன ?


புதர் செடி, சதுப்பு நிலம் . 


2.மாட்டின் வயதை அறிவது எப்படி ?


 பற்களைக் கொண்டு.


English words & meanings :


endosymbiosis - en·do·sym·bi·o·sis - symbiotic association of one living organism living inside another one, noun. உள்ளுறை கூட்டுயிராதல். பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு

NMMS Q 32:


3 மற்றும் 5 ஆகிய எண்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஈரிலக்க எண்களின் எண்ணிக்கை : 


விடை: 4. விளக்கம்: 35 ,53, 33, 55


ஜூலை 26 இன்று

ஜார்ஜ் பெர்னாட் ஷா 


ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.


நீதிக்கதை


அன்புக்கு அடிமை


ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக்கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.


மறுநாளே, அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து திரும்பி வந்து விட்டாள். மறுநாள் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.


புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப்பெண் மனம் குழம்பிப் போனாள். முனிவர் கூறினார். இனி உனக்கு மூலிகை தேவையில்லை. புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா? என்ன?


முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள். நம் பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக்கூடாது


இன்றைய செய்திகள் - 26.07.22


◆இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு உருமாறிய ஒமைக்ரான் தொற்று பாதிப்பு .


◆11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


◆மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


◆இந்தியாவில் ஏழைகளின் கனவு நிறைவேறும்; அதற்கு நானே சாட்சி' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் உரை.


◆கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்.


◆குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்நாவெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.


◆செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததில் சாதனை.


◆ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆஸ்திரேலிய வீரரை ஒப்பந்தம் செய்தது பெங்களூரு அணி.


◆வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் வெற்றி: 34 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய அணி.


Today's Headlines


◆ Tamil Nadu has the highest incidence of Omicron infection in India.


 ◆Bicycles Scheme for 11th Class Students: Launched by Chief Minister Stalin.


◆ More than a thousand people participated in a remarkable run in Chennai to raise awareness of the 44th Chess Olympiad in Mamallapuram.


 ◆The dream of the poor in India will come true;  I am witness to that' - President Draupadi Murmu's first speech.


 ◆California wildfires: Thousands evacuated


 ◆The World Health Organization has declared monkey measles as an international medical emergency.  A Danish pharmaceutical company has produced the first vaccine against this.  It is named Imnavex.


 ◆Chess Olympiad Practice Tournament: Achievement in Webcast Live


 ◆ISL  Football: Bengaluru team signed an Australian player.


◆ Winning against West Indies: Team India breaks 34-year-old record


 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment