பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது . அவ்வகையில் , இவ்வாண்டிற்கான கல்வி வளர்ச்சி நாளிலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய வழிகாட்டுதலின்படி அனைத்துவகைப் பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களிலும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் திருவுருவப் . படத்தை அலங்கரித்து விழாவினைக் கொண்டாடவும் , அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடியதற்கான விவரங்களைத் தொகுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இவ்வாணையரகத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment