திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலின் தேரோட்ட நிகழ்வை கருத்தில் கொண்டு வரும் ஜூலை 11ம் தேதியன்று அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜூலை 23ம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment