பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிளஸ்-1 மாணவர்கள் வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் புரவலர் குமாரி ஷிபுலால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளையின் மூலம் ‘வித்யாதன்’ திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்று பிளஸ்-1 சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் இந்த உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.
ரூ.10 ஆயிரம் உதவித்தொகை
அவ்வாறு விண்ணப்பிக்கும்
மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 11, 12-ம் வகுப்புகளில் ஆண்டுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
அந்த வகுப்புகளிலும் சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு பட்டப்படிப்பை தொடர ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
எனவே தகுதியுள்ள மாணவர்கள் www.vidyadhan.org என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் அல்லது 73396 59929, 87924 59646 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாக தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment