TN Plus 2 exam : பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 25ல் துணைத்தேர்வு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, June 19, 2022

TN Plus 2 exam : பிளஸ் 2 தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 25ல் துணைத்தேர்வு

 


தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளார்.


12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.பிளஸ்2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் பொய்யா மொழி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.4.27 லட்சம் மாணவிகள், 3.94 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 27ஆம் தேதி நடைபெறும். வரும் 24ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் 97.95% மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் 97.27%, ராமநாதபுரம் 97.02% உள்ளது. 86.69% தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உள்ளது. மாணவ, மாணவிகளை தேர்வு எழுத வரச்சொல்லி நிறைய தன்னம்பிக்கை கொடுத்தோம். ஆனாலும் சில லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. அவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூலை 25ஆம் தேதி நடைபெறும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் துணைத் தேர்வு தொடங்கும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment