DSE PROCEEDINGS: பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்குதல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, June 28, 2022

DSE PROCEEDINGS: பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்குதல்

 

IMG_20220628_155707

தமிழகத்தில் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2008-2009 ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

 மதுரை , தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் ( கள்ளர் சீரமைப்பு ) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது . பார்வை 3- ல் காணும் இவ்வாணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின் படி 2022-2023 - ஆம் கல்வி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி , 2022-2023 - ஆம் ஆண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பீட்டு தொகைக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் மற்றும் கள்ளர் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை ( மதுரை , தேனி , திண்டுக்கல் ) முழுமையாகவும் , துல்லியமாகவும் அனைத்து கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் ( EMIS- Educational Management Information System ) இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment