ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பங்கேற்றார் .தொடர்ந்து இன்ற ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 13.40 ஏக்கர் பரப்பளவில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் மாவட்ட இந்த ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளதுதொடர்ந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது திடீரென அரசுப் பள்ளி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களை சந்தித்த முதலமைச்சர், பாடங்கள் சிறப்பாக நடத்தப்படுகிறதா என்று கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு, நன்றாக படிக்க வேண்டும், வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தொடர்ந்து அரசுப் பள்ளியில் நடைபெறும் விழாவில் சுமார் 60 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கப்படவுள்ளது...
No comments:
Post a Comment