கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, June 15, 2022

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு

 

மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படித் தொகையை பத்து மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாள் கொண்டாடப்படும் என்றும்ஸ, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி, கூட்டங்களில் பங்கேற்கும் மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளுக்கான அமர்வுப்படித் தொகை ரூ.100 இல் இருந்து ரூ.1000 என பத்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment