10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தோல்வியடைந்த மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைத்தேர்வு எழுது வெற்றிபெறலாம் என்று அறிவுறை வழங்கியுள்ளார்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30ஆம் தேதி வரை நடந்தது.
12ஆம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் பேர், 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் பேர் என மொத்தம் 17.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகள்இதனிடையே 10, 12ஆம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகும். சென்னையில் தேர்வுமுடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சில இடங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.டிஜிபி சைலேந்திர பாபுஇந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தோல்வியடைந்த மாணவர்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் துணைத்தேர்வு எழுது வெற்றிபெறலாம் என்று அறிவுறை வழங்கியுள்ளார்.
இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள சைலேந்திர பாபு," பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மனம் தளர வேண்டாம், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண்கள் பெறலாம். பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் மறுதேர்வு எழுதி நீதிபதி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றி வருகின்றனர்.
நீதிபதி ஆகலாம்தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட தொழிற்கல்வியை தேர்தெடுத்து அதில் சாதிக்கலாம். எஞ்சினியரிங், சினிமா, மார்கெட்டிங் உள்ளிட்ட பல துறைகளில் ஆயிரக்கணக்கான வாய்ப்புகள் இருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பலர் நீதிபதியாகவும், ஐபி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும் ஆகியுள்ளனர்.கவுன்சிலிங் பெறலாம்கடந்த முறை பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் இம்முறை அவ்வாறு நடக்கக் கூடாது. தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் உள்ள மாணவர்கள் காவல் நிலையத்தை அணுகி கவுன்சிலிங் பெறலாம்" என கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment