டாடாவுடன் ஒப்பந்தம் போட்ட தமிழக அரசு! இனி படித்து முடித்தவுடன் வேலை ரெடி! விவரம் என்ன? - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, June 14, 2022

டாடாவுடன் ஒப்பந்தம் போட்ட தமிழக அரசு! இனி படித்து முடித்தவுடன் வேலை ரெடி! விவரம் என்ன?



தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறைக்கும் புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.இந்த ஒப்பந்தம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில், அரசு ஐடிஐயில் பயின்ற மாணவர்கள் பணியமர்த்தப்பட வாய்ப்பு அதிகம்.


 71 அரசு ஐடிஐ


71 அரசு தொழிற் பயிற்சி நிலையங்களை தொழில் 4.0 தரத்திலான நவீன திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.


புது புதுக் கருவிகள்


இதன்மூலம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவை ரூ.2,877.43 கோடி செலவில் நிறுவப்பட்டு தொழில்நுட்ப மையங்களாக மாற்றப்படவுள்ளன.


அட்வான்ஸ்டு பயிற்சிகள்


இதன்மூலம், ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்டிரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கண்ட்ரோல், அட்வான்ஸ்டு மேனுஃபேக்சரிங், மின்சார வாகனங்களுக்கான மெக்கானிக், இண்டர்நெட் ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுஃபேக்சரிங், இண்டஸ்ட்டிரியல் பெயிண்டிங், அட்வான்ஸ்டு வெல்டிங் போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.


வேலை வாய்ப்பு


இதனால் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் ஏற்படும். மேலும், தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோர்களும் பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.

No comments:

Post a Comment