தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30ஆம் தேதி வரை நடந்தது.12ஆம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் பேர், 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் பேர் என மொத்தம் 17.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
தேர்வு முடிவுகள்
இந்நிலையில், 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று ஒரே நாளில் வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்புக்கு மதியம் 12 மணிக்கும் முடிவுகள் வெளியாகும். சென்னையில் தேர்வுமுடிவுகளை பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.12-ம் வகுப்பு தேர்ச்சி12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76℅ மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
தொடர்ந்து 12 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் வெளியானது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ட்விட்டரில் வாழ்த்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,"பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது! என பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment