பள்ளிக்குக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் எல்.கே.ஜி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் பலர் காயமடைந்தனர்.தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் இருந்து நெல்லையில் உள்ள தனியார்ப் பள்ளிக்குத் தினம் தோறும் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் ஆட்டோ மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் இன்று குழந்தைகளை ஏற்றிக் கொண்டு செய்துங்கநல்லூர் அருகே உள்ள அனவரதநல்லூர் பகுதியில் இருந்து ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்தது.
சிறுவன் உயிரிழப்பு
டிரைவரால் ஆட்டோவை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள வெட்டியபந்தி ஊத்துப்பாறை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் செல்வநவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்வநவீனுக்கு வெறும் நான்கரை வயது தான் ஆகிறது. இவர் அந்த பள்ளியில் எல்கேஜி தான் படித்து வந்தார்.ஏழு பேர் காயம்மேலும் இந்த ஆட்டோவில் பணித்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மற்றும் மகள்கள் நவீன்குமார், செல்வராகவி, முகிலா, பார்வதிநாதன் மகன் குணவதி, நல்லதம்பி மகன் இசக்கி ராஜா, வசவப்பபுரம் ஆறுமுகக்குமார் மகள் அபிராமி, மகன் அபிவரதன் ஆகிய ஏழு பேரும் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக உடனடியாக முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிகிச்சை
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மாணவன் உடலையும், காயமடைந்த மாணவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை அரசு மருத்துவமனையில் இப்போது 4 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல மேலும் 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.முதல் நாள்இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முறப்பநாடு போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த செல்வநவீன் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்து இன்றுதான் பள்ளிக்கு முதன் முதலாகச் செல்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment