பள்ளிகள் நாளை திறப்பு; ஒரு வாரம் பாடம் கிடையாது! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, June 12, 2022

பள்ளிகள் நாளை திறப்பு; ஒரு வாரம் பாடம் கிடையாது!

gallerye_005337306_3051198

தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறை முடிந்து, 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளியில், ஒரு வாரத்திற்கு பாடம் நடத்தாமல், புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 5 முதல் மே 31 வரை, தனித் தனியாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை, இன்றுடன் முடியும் நிலையில், நாளை முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

முதல்கட்டமாக, 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, புதிய கல்வியாண்டு வகுப்புகள், நாளை துவங்க உள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் 20ம் தேதி பிளஸ் 2வுக்கும்; வரும் 27ம் தேதி, பிளஸ் 1 வகுப்புகளும் துவங்க உள்ளன.அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை பள்ளி திறந்ததும், இலவச பாடப் புத்தகம் மற்றும் நோட்டு வழங்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

முதல் ஒரு வாரத்திற்கு, அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்தப்படவுள்ளன. அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து, வழக்கமான பாடங்கள் நடத்தப்படும் என்று, பள்ளிக் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களில், குறிப்பிட்ட சிலருக்கு, முதல் ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

  இதைத் தொடர்ந்து, வரும் 20ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 27ம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.கோடை விடுமுறையில், ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து வைக்கவும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை முறைப்படி ஏற்படுத்தி தரவும், கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்

No comments:

Post a Comment