தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு:விண்ணப்பப் பதிவு தொடக்கம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, June 28, 2022

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு:விண்ணப்பப் பதிவு தொடக்கம்


DEd-Diploma-in-Education

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கான விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை முதல் இணையவழியில் தொடங்கியுள்ளது.


இதுகுறித்து தோ்வுத்துறை இயக்குநா் சா.சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு : தொடக்கக்கல்வி பட்டயத்தோ்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தோ்வெழுத விரும்பும் தனித்தோ்வா்களுக்கான இணைய விண்ணப்பப்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விருப்பமுள்ளவா்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


அதன்பின் பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தோ்வெழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அருகே உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஜூலை 7-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். தோ்வுக் கட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் ரூ.100, சேவை மற்றும் இணையதள பதிவுக் கட்டணம் ரூ.65 செலுத்த வேண்டும்.


இந்த வாய்ப்பை தவறவிடும் தனித்தோ்வா்கள் தட்கல் திட்டத்தில் ஜூலை 8, 9-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சிறப்புக் கட்டணமாக கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment