அரசு ஊழியர்களுக்கான துறை தேர்வின் உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு ஊழியர்களுக்கு, 151 துறை தேர்வுகள் இந்த மாதம், 6ம் தேதி முதல் 14ம் தேதி வரை, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்பட்டன. அதில், 122 தேர்வுகளின் உத்தேச விடை குறிப்புகள், www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அவற்றின் மீது ஆட்சேபனைகள் இருந்தால், உரிய ஆதாரங்களுடன், இன்று முதல் வரும் 5ம் தேதிக்குள், contacttnpsc@gmail.com என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுக்கள் அனுப்பலாம். கடிதம் வழியே ஆட்சேபனை தெரிவித்தால், ஏற்றுக் கொள்ளப்படாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment