பறந்த அறிவிப்பு.. தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி.. செம குஷியில் பெற்றோர்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, June 6, 2022

பறந்த அறிவிப்பு.. தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்.. அரசு அதிரடி.. செம குஷியில் பெற்றோர்கள்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறிது.தமிழ்நாட்டை பொறுத்தவரை, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது குறைவாகவே நடப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

 தனியார் பள்ளிகளுக்கே பெற்றோர்கள் முக்கியத்துவம் தந்து வருவதாகவும், இதை களைய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட வருடங்களாகவே கோரப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகள்பொதுவாக, மே மாதத்தில் தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை.. அவர்கள் டிசம்பர் மாதமே மாணவர் சேர்க்கையை தொடங்கி விடுவார்கள்.. இந்த முறையும் அப்படித்தான் நடந்துள்ளது.. அதற்கேற்றபடி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதை பாமக போன்ற கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அரசு சார்பில் ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.5 வயது குழந்தைகள்இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: ஐந்து வயது பூர்த்தி அடைந்த அனைத்து குழந்தைகளையும், அரசு பள்ளிகளில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில், தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை, பொது மக்கள் அறியும் வகையில், வண்ண, 'பேனர்'கள் வைப்பதுடன், துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க வேண்டும்.சிற்றுண்டிதமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதை எடுத்துரைத்து, விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை, கோடை விடுமுறை இறுதியில், பள்ளிகள் திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடத்த வேண்டும்.மாணவர்கள்ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி, மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளில், ஐந்து வயதானோரை கண்டறிந்து அவர்களையும், பள்ளிகளைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளையும் கண்டறிந்து சேர்க்க வேண்டும். ஊக்கப் பரிசு வழங்குவதன் வழியே, மாணவர் சேர்க்கையை மேலும் அதிகரிக்கலாம்.சாதனைகள்பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று, அரசு பள்ளிகளின் சாதனைகள், கட்டமைப்பு வசதிகள், நலத் திட்டங்கள், கல்வி உதவித்தொகைகள் குறித்து, 

பெற்றோரிடம் எடுத்துக் கூற வேண்டும். பள்ளி மேலாண்மை குழு சார்பில், பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தலாம். 100 சதவீதம் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊக்கப்பரிசு மற்றும் ஊக்கத்தொகையை தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றேர்களின் கவனத்தை இந்த அறிவிப்பு ஈர்த்து வருவதாக கூறப்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment